தர்மபுரி அருகே மலைப்பாதையில் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து 30 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னசத்திரத்தில் இருந்து துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக 30க்கும் மேற்பட்டோர் சரக்கு வாகனத்தில் தர்மபுரி நோக்கி வந்துள்ளனர். அப்பொழுது பாலக்கோடு அருகே கண்டகபெயில்மலைப்பாதை வழியாக சரக்கு வாகனம் சென்ற பொழுது திடீரென சரக்கு வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர் என முதற்கட்ட தகவல்வெளியாகியுள்ளது.