/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1880.jpg)
திருச்சி மாவட்டம், பெட்டவாய்தலை பகுதியில் உள்ள காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன் (45). இவரிடம் விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்று உள்ளது. அதனை எப்போது அவர் தனது வீட்டின் வெளியே நிறுத்திவைப்பார். அதுபோல், நேற்று இரவும் வீட்டு வாசலில் தனது காரை நிறுத்தியுள்ளார்.
இன்று காலை வழக்கம் வழக்கம் போல் காரை சுத்தம் செய்ய கார் நிறுத்துமிடத்திற்கு வந்து பார்த்த போது, கார் திருடுபோயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே பெட்டவாய்தலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கை ரேகை நிபுணர்களைக் கொண்டு ஆதாராங்களை சேகரித்தனர். மேலும் பெட்டவாய்தலை போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் அடையாளம் தெரியாத நபர் காரை திருடி செல்வது தெரியவந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)