A car standing in the distance; The woman who caused the accident due to excessive intoxication

மித மிஞ்சிய போதையில் பெண் ஒருவர் காரை இயக்கிய நிலையில் விபத்து ஏற்பட்டு கார் சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது ஏறி மரத்தின் மீது மோதி அந்தரத்தில் நின்ற சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இளம்பெண் ஒருவர் பாரில் மது அருந்திவிட்டு தன்னுடைய இன்னோவா காரில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது மதுபோதையில் காரை ஓட்டிய பொழுது கார் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி மரத்தின் மீது ஏறிய நிலையில் அந்தரத்தில் நின்றது. இதில் மொத்தமாக எட்டு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரின் உள்ளே பார்த்தபோது இளம்பெண் ஒருவர் மது போதையில் மயங்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது.