'Car owners beware'- Tamil Nadu government warning

இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் தேவையின்றி மாற்றங்கள் செய்யக்கூடாது எனதமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகத்தின் போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சமீப காலமாக மோட்டார் வாகனங்கள் தானாக தீ பற்றி எரியும் தீ விபத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவ்விபத்துக்கள் பற்றி ஆய்வு செய்கையில் மோட்டார் வாகனங்களில் மாறுதல் செய்யப்படுகையில் அங்கீகரிக்கப்படாத (சி.என்.ஜி. அல்லது எல்.பி.ஜி.) (CNG / LPG) மாற்றங்கள். அதற்கான அங்கீகரிக்கப்படாத அல்லது தகுதியில்லாத நிறுவனங்களால் மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் தீ விபத்துக்குள்ளாகிறது.

Advertisment

எனவேவட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவது மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதிகளின்படி குற்றமாகும். அதனால்வாகன உரிமையாளர்கள் இவ்வகையான செய்கையில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.