Car overturn incident Tragedy with 3 peoples

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அய்யனார் கோவில் என்ற இடத்தில் ராமநாதபுரத்தில் இருந்து வந்து கொண்டிருந்த கார், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 20 அடி பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர்,உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்குப்பிரேதப் பரிசோதனைக்காகஅனுப்பி வைத்துள்ளனர்.

முன்னதாகச் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கடந்த 11 ஆம் தேதி மொத்தம் 3 இரு சக்கர வாகனங்கள் ஒரே நேரத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று, இரு சக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், இந்த கோரச் சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் உள்ள மக்களிடம் பெரும்அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.