A car out of control; Tragedy happened to the couple who went with the child!

திருச்சி மாவட்டம், மாடக்குடி சிவன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (28). இவரது மனைவி சாந்தி (23). கணவன், மனைவி இருவரும் குழந்தையுடன்நேற்று மாலை இருசக்கர வாகனத்தில்திருச்சி - சென்னை புறவழிச்சாலை திருவானைக்காவல்(தாகூர் தெரு) பகுதியில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, சென்னையிலிருந்து திருச்சி வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிமகேஷ் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதிசாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புக் கம்பிகளையும் உடைத்துக்கொண்டு சாலையில் பாய்ந்தது.

Advertisment

இதில்இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். சிறிது நேரத்தில் சாந்தி இறந்தார். மகேஷ் மற்றும் குழந்தை ஆகியோர் காயமடைந்தனர். தகவலறிந்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த காரில் திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த அகமதுல்லா (23), தென்னூரை சேர்ந்த சேக்பரி (27), உள்ளிட்டோர் பயணித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த இஷான்தீன் (26) காரை ஓட்டியுள்ளார். இது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisment