Advertisment

திடீரென ஏற்பட்ட தீ விபத்து; எலும்புக்கூடு போல் நின்ற கார்!

car on the national highway caught fire

சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சேகர், பரமசிவன், சசிகுமார் ஆகிய மூன்று பேரும் தனது சொந்த வேலையாகச் சென்னையில் இருந்து பெங்களூர் சென்று கொண்டிருந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பொன்னகர் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது காரின் இன்ஜினில் புகை வருவதை அறிந்த காரில் இருந்த மூன்று பேரும் உடனடியாக இறங்கியுள்ளனர்.

Advertisment

காரில் இருந்து இறங்கிய அடுத்த நொடியே திடீரென கார் தீப்பிடித்துக் கொழுந்துவிட்டு மளமளவென எரிந்ததால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். ஆம்பூர் தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற ஆம்பூர் தீயணைப்புத் துறை மற்றும் கிராமிய காவல்துறையினர் எரிந்து கொண்டிருந்த காரை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அனைத்தனர். இருந்தபோதிலும் கார் முற்றிலுமாக எரிந்து எலும்பு கூட போல் நின்றது. மேலும் காரில் பயணம் செய்த மூன்று பேரும் முன்னெச்சரிக்கையாக காரில் இருந்து இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Advertisment

சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

police thiruppathur car
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe