Advertisment

கட்டுப்பாட்டை இழந்த கார் கடைக்குள் பாய்ந்து விபத்து

The car lost control and crashed into the shop

Advertisment

கோவையில் அதிவேகத்தில் வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்ததோடு டெலிபோன் இணைப்பு பெட்டி மற்றும் சிக்னல் கம்பத்தை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் வந்த சிவப்பு நிற கார் ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கடைக்குள் புகுந்தது. மேலும் சாலை ஓரத்தில் இருந்த டெலிபோன் இணைப்பு பெட்டி மற்றும் போக்குவரத்து சிக்னல் கம்பத்தின் மீதும் மோதியது. உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் காரை ஓட்டிவந்த சூலூரை சேர்ந்த சூர்யா பிரகாஷ் என்ற நபரை காயத்துடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கோவை மாநகர் பகுதிகளில் கார், இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அதிவேகமாகச் செல்லக்கூடாது என போலீசார் அறிவுறுத்தி வரும் நிலையில், கார் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

accident car kovai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe