/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/accident 200.jpg)
வேளாங்கண்ணி அருகே கார் மீது மீன் ஏற்றி வந்த லாரி மோதி கேரளாவை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லை வாசலில் இருந்து நள்ளிரவில் மீன் ஏற்றிக்கொண்டு, மன்னார்குடி நோக்கி சென்றது மீன் லாரி. அது வேளாங்கண்ணி அருகேயுள்ள பரவை என்னும் இடத்தை தாண்டியநிலையில், கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கோயிலுக்கு வந்த காரின் மீது மோதி மூன்று பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
கேரளா மாநிலம் பாலக்காட்டு பகுதியை சேர்ந்தவர் திலிப், அவரது தாய் கிருஷ்ணவேணி மற்றும் அவரது உறவினர் ஆர்சாமி உள்ளிட்ட ஐந்து பேர் கோயிலுக்குவந்தனர். மூன்றுபேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், உயிரிழந்த திலீப்பின் தந்தை பகவதீஸ்வரன், தங்கை தரணி ஆகிய இருவரும் படுகாயத்துடன் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீன் லாரி ஓட்டுனர் ரவிசந்திரனும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நள்ளிரவு நடைபெற்ற கோரவிபத்து குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
க.செல்வகுமார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)