
நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கார் சாவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அண்மையில் ரஜினிகாந்தின் மற்றொரு மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அது தொடர்பாக போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி கோபாலபுரத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த பொழுது தனது காரின் மற்றொரு சாவி காணாமல் போனதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.