தமிழகத்தில் பொதுவாக குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். அதேபோல் குற்ற வழக்கில் தொடர்புடைய அம்பாசிடர் கார் மற்றும் ஆட்டோவை கைப்பற்றிய உறையூர் போலீசார் அவை இரண்டையும் உறையூர் போக்குவரத்து காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். எதிர்பாராதவிதமாக காரும், ஆட்டோவும் திடீரென தீப்பற்றி எரிந்து உள்ளது. போலீசார் உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்தனர். குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட காரும், ஆட்டோவும் மர்மமான முறையில் எரிந்தது குறித்து உறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.