Advertisment

ஓடும் காரில் பயங்கர தீ விபத்து! 

car incident police investigation in chennai

சாலையில் சென்றுக் கொண்டிருந்த சொகுசு காரில் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், தொழிலதிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த தொழிலதிபர் கணேசன், திருமங்கலத்தில் இருந்து அண்ணா நகருக்கு சொகுசு காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, சற்றும் எதிர்பாராத நேரத்தில் சொகுசு கார் பலத்த சத்தத்துடன் வெடித்தது. அத்துடன், காரின் கதவு பூட்டிக் கொண்டிருந்ததால், கணேசன் காருக்கு உள்ளேயே சிக்கிக் கொண்டார். அப்போது, காரில் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

Advertisment

கணேசனின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, தண்ணீரை ஊற்றி கணேசனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். மேலும், கணேசனின் உடலில் தீப்பற்றிக் கொண்டதால், சுயநினைவை இழந்திருக்கிறார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், தீயை அனைத்து கணேசனை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும், தொழிலதிபருக்கு சுமார் 60% தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

car incident
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe