jkl

திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த பிரசாந்த், அவரது மனைவி நிர்மலா, பிரசாந்தின் தந்தை குமரவேல், தாய் பாக்கியம் ஆகியோருடன் கரூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு மீண்டும் திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்தனர்.

Advertisment

சரியாக குளித்தலை அருகே உள்ள மனதட்டை என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தபோது, திருச்சியிலிருந்து கரூர் நோக்கி சென்ற இன்னோவா கார் அவர்கள் வந்த காரின் மீது நேருக்கு நேராக மோதியதில் குமரவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரசாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரசாந்திற்கு திருமணமாகி சரியாக ஒரு வாரம் ஆன நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இச்சம்பவம் குடும்பத்தினர் மத்தியிலும் அவர்கள் வசித்து வந்த பகுதியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment