/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/art-img-police-siren_15.jpg)
சென்னை அயனாவரம் பகுதியைச்சேர்ந்த மோகன் அயானிஎன்பவர் தனக்குச் சொந்தமான கார் ஒன்றை, ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்து வரும் தனது மருமகனுக்கு சென்னையில் இருந்து அனுப்பி வைக்க இணையதளம்மூலம் ஹரியானா மாநிலத்தில் உள்ள நிறுவனத்தை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்து உள்ளார். அதற்கு நிறுவனம் சார்பில் உங்கள் காரை செகந்திராபாத்தில் கொண்டு சேர்க்க 5 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு மோகன் அயானியும் ஒப்புக் கொண்டு உள்ளார்.
இதனைத்தொடர்ந்து, நிறுவனத்தின் சார்பில் ஹரியானாவில் இருந்து சென்னை வந்த இரு வடமாநில இளைஞர்கள் கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம்தேதி மோகன் அயானியிடம் இருந்து காரை பெற்றுக் கொண்டு செகந்திராபாத் செல்வதாக கூறி காரை ஓட்டி சென்று உள்ளனர். ஆனால் நிறுவனம் சார்பில் ஏற்கனவே தொலைபேசியில் தெரிவித்தபடி உரிய நேரத்தில் காரை தனது மருமகனிடம் ஒப்படைக்காததால் சந்தேகம் அடைந்த மோகன் அயானி மீண்டும் நிறுவனத்தைதொலைபேசியில்தொடர்பு கொண்டு பேசிய போது கூடுதலாக 25 ஆயிரம் பணம் தந்தால் தான் காரை ஒப்படைப்போம் என்று கூறியுள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மோகன் அயானி இதுகுறித்து அயனாவரம்போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், காரை செகந்திராபாத்துக்கு ஒட்டி செல்லாமல் பணம் பறிக்கும் நோக்கில் பெங்களூருக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பெங்களூரு விரைந்த போலீசார் காரை கடத்தி சென்ற ஹரியானவை சேர்ந்த பிராவின் சிங், ரோனாக் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரும் விமானம் மூலம் சென்னை வந்து காரை பெங்களூருக்கு கடத்தி சென்றதும். இதற்கு முன்னர்இவர்கள் ஏழு பேரிடம் இதே போல் கார் டிரைவராக நடித்துகார்களை கடத்தி பணம் பறித்ததும்விசாரணையில் தெரியவந்துள்ளது. விமானத்தில் வந்து காரை கடத்தி சென்ற சம்பவம் அயனாவரம்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)