Advertisment

தடம்புரண்டு கார் விபத்து... சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி!

Car Incident... CCTV footage released shocks!

Advertisment

திண்டுக்கல்லில் சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் முன்பக்க டயர் வெடித்ததில் நிலை தடுமாறி கார் உருண்டு விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகேசென்றுகொண்டிருந்த காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதன் காரணமாக நிலை தடுமாறிய கார் உருண்டு விழுந்தது. அந்த காரில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மோகன் என்பவர் சொந்த ஊரான நெல்லைக்கு மனைவி சோனியா, குழந்தைகள் அனுசியா, ஹேம பிரபா ஆகியோருடன் சென்றுகொண்டிருந்தனர்.காரை பிரபு என்ற ஓட்டுநர் ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. திடீரெனகாரின் முன்பக்கத்தில் உள்ள இடது பக்க டயர் வெடித்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மோகன், சோனியா, ஹேம பிரபா லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அனுசியா மற்றும் கார் ஓட்டுநர் பிரபு ஆகியோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்பொழுது அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

car
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe