Car incident 3 people involved

Advertisment

இரு கார்கள் மோதி நிகழ்ந்த விபத்தில் சிக்கி 3 பேர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பச்சக்குப்பம் என்ற பகுதியில், இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் எதிர்த்திசையில் வந்த கார் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சரவணன், பெங்களுருவைச் சேர்ந்த மைத்தேரயன், பெண் ஒருவர் என 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கி 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிக்கிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.