Advertisment

சடலம் ஏற்றிச் சென்ற அமரர் ஊர்தி எரிந்து நாசம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அகத்தியன் (வயது50). வேலைக்காக கரூர் சென்றவர் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் இறந்தார். தகவல் அறிந்து உறவினர்கள் கரூர் சென்று அகத்தியன் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அரசு அமரர் ஊர்தியில் சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர்.

Advertisment

car fire accident in antipatti

இந்த நிலையில் கீரனூர் அருகே அகத்தியன் சடலத்துடன் வந்த அமரர் ஊர்தி திடீரென தீபற்றி எரியத் தொடங்கியது. ஊர்தியில் தீ பற்றியதைப் பார்த்த வாகனத்தில் இருந்தவர்கள் சடலத்தை இறக்கி சாலையில் வைத்துவிட்டு உயிர் தப்பினார்கள். அதன் பிறகு அமரர் ஊர்தி பலத்த சேதமடைந்தது. அதனையடுத்துமாற்று வாகனத்தில் சடலம் கொண்டு செல்லப்பட்டது.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டத்தில் அடிக்கடி ஆம்புலன்ஸ் அமரர் ஊர்திகள் தீபற்றி எரியும் சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

deadbody dead Uhar fire accident car accindent
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe