/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a547.jpg)
நீலகிரி மாவட்டம் உதகையில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென நிலைதடுமாறி வீட்டின் மேல் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சென்னையைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் காரில் சுற்றுலா வந்தனர். உதகை-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மலைப்பாதை வழியாக கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக காரை திருப்பிய பொழுது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் கீழே இருந்த வீட்டின் கூரை மேலே விழுந்தது.
இந்த விபத்தில் காரில் இருந்தவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அதேநேரம் வீட்டில் இருந்தவர்களும் பத்திரமாக வெளியேறினர். ஆனால் கார் விழுந்து வீட்டின் மேற்கூரை சேதமடைந்தது. இந்த சம்பவம் தொடர்பாக உதகை நகர மேற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)