A car entered the collector's office with knives

கடலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த காரில் கத்திகள் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கார் ஒன்றை சோதனையிட்டனர். அதில் காரின் டிக்கி பகுதியில் நான்கு கத்திகள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக கத்திகளை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து காரில் வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

விசாரணையில் திருநாவுக்கரசு என்பவர் வாழை வெட்டும் பணியை தன்னுடைய தோட்டத்தில் முடித்துவிட்டு நேராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்ததால் கத்திகளை காரில் வைத்து எடுத்து வந்ததாக விளக்கம் அளித்தார். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கத்திகளை வைத்து போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் மாவட்ட ஆட்சியர் வளாகம் பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.