
காட்பாடி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தின் மோதியதில் மாமியார், மருமகள் என இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த காதணி விழாவிற்கு சென்று விட்டு சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நோக்கி மாமியார் லலிதா, மருமகள் சசிகலா மற்றும் உறவினர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது திருவலம் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது. விபத்தில் மருமகள் சசிகலா, மாமியார் லலிதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உடன் பயணித்த உறவினர்கள் மூன்று பேர் படும் காயங்களுடன் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேல்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)