சென்னையில் குடிபோதையில் காரை ஓட்டிவந்த நபர் ஏற்படுத்திய விபத்தில் இருவர் உயிரிழந்தனர் .

Advertisment

accident

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சென்னை வில்லிவாக்கத்தில் பாடி மேம்பாலம் பகுதியில் குடிபோதையில் இருந்தவர் ஓட்டிய கார் தடுமாறி அருகிலிருந்தஅன்னை சத்யா நகரில் புகுந்தது. அப்போது டீ கடை முன்பு நின்றுகொண்டிருந்த மோகன் என்பவர் மீது மோதிய அந்த கார் சாலையில் நடந்து சென்ற சரோஜா என்பவர் மீதும் மோதியது.இந்த விபத்தில் மோகன் மற்றும் சரோஜா ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

Advertisment

இதனை கண்ட அப்பகுதி மக்கள் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தேவேந்திரன் என்பவனுக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும் இந்த விபத்து காட்சிகளை ஆய்வு செய்தபோது கார் தடுமாறி அந்த தெருவுக்குள் புகும் காட்சி இருவர் மீதும் மோதும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.