Car collides with two wheeler video released

Advertisment

சேலத்தில் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளாகும் நெஞ்சைப் பதற வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் என்ற இளைஞர், பழனிக்கு சென்று விட்டு தனது நண்பர் அருணுடன் இருசக்கர வாகனத்தில் சொந்த மாவட்டத்திற்கு திரும்பிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் காளிக்கவுண்டம்பாளையம் பகுதியில், இரு சக்கர வாகனத்தை முந்திக் கொண்டு வேகமாக வந்த கார் அவர்களின் வாகனத்தை மோதியதில் இளைஞர்கள் சாலையில் விழுந்து படுகாயமடைந்தனர். இளைஞர்கள் உடனடியாக சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றன.

இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதும் காட்சிகள், பின்னால் வந்த கார் ஒன்றில் உள்ள கேமராவில் பதிவானது. இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.