Advertisment

தனியார் பேருந்து மீது கார் மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு

Car collides with private bus, two loss their live

புதுக்கோட்டை அருகே தனியார் பேருந்து மீது கார் மோதிய கொடூர விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் காவல் நிலையம் அருகே உள்ள திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த தனியார் பேருந்தும், புதுக்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதி விபத்தானது. கார் நேருக்கு நேர் மோதியதில் பேருந்துக்கு அடியில் கார் சிக்கி நொறுங்கியது. இதில் காரில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisment

இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றநமணசமுத்திரம் காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து பேருந்துக்கு அடியில் சிக்கிய காரை மீட்டு காரில் இருந்த சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரை மீட்டனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவத்தால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காரில் வந்தவர்கள் விவரம், எங்கிருந்து வந்தார்கள் என்பது தொடர்பாக நமணசமுத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

accident Pudukottai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe