Car collides with government bus ...

செங்கல்பட்டு அருகே வாகனமும் அரசு பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

 Car collides with government bus ...

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் வசித்து வரும் சந்திரசேகர் என்பவரின் மகன் கபிலன். இவர் சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் நிலையில் தினமும் வாகனத்தில் கல்லூரிக்குச் செல்வது வழக்கம். இன்று காலை கீரப்பாக்கம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பொழுது, சென்னையிலிருந்து கல்பாக்கம் நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் மாணவன் கபிலன் பயணித்த வாகனம்நொறுங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் கபிலன் உயிரிழந்தார். அந்த பகுதியில் சிசிடிசி படக்கருவிகள் எதுவும் இல்லாத நிலையில் இந்த விபத்து குறித்து கீரப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு கல்லூரி மாணவனின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment