/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/poice-siren_14.jpg)
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை - சேலம் பிரிவு சாலையில் ஏ. குமாரமங்கலம் அருகில் சேலம்நோக்கிசென்று கொண்டிருந்தகார்ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.
சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர், ஊட்டி செல்வதற்காககாரில்வந்துகொண்டிருந்தனர். இந்த காரைஇன்தாஸ்என்பவர் ஒட்டி சென்றார். அதிகாலை நேரத்தில் குமாரமங்கலம் அருகில் உள்ள பள்ளி அருகே, சென்று கொண்டிருந்தபோதுகாரின்முன்பக்கத்திலிருந்துதிடீரெனபுகை வந்துள்ளது. இதைப் பார்த்தடிரைவர், காரை சாலையோரம் ஓரம் கட்டி நிறுத்தினார். உடனடியாககாரில்இருந்த அனைவரும் காரை விட்டு கீழேஇறங்கிதப்பித்துள்ளனர்.கார்முழுவதும் தீபரவிஎரிய ஆரம்பித்தது.
தேசிய நெடுஞ்சாலையில் திடீரெனகார்தீப் பிடித்து எரிந்ததால் சேலம் - உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதன் பின் அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாககாரில்பயணம் செய்த அனைவரும் எந்தவித காயங்களும் இன்றி தப்பித்தனர்.
தகவல் அறிந்த சம்பவத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டைபோலீசார், எரிந்த காரை சாலையிலிருந்து அப்புறப்படுத்திபோக்குவரத்தைசரி செய்தனர். இது குறித்துபோலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)