
ஹோட்டல் முன்பு கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் சிதம்பரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட முத்தையா நகர் கோவிலுக்கு அருகே ஆச்சி (எ) திலகம் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். உணவகத்திற்குத்தேவையான உணவுப் பொருட்களை வீட்டில் தயார் செய்துஅவரதுடாட்டா விஸ்டா காரில் விற்பனைக்காக ஏற்றி வருவதை வாடிக்கையாகச் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று வழக்கம்போல் கடையின் அருகே காரை நிறுத்தி வைத்திருந்தபோது மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து மளமளவென எரிந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் எரிந்த கார் மீது தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் இதுகுறித்து சிதம்பரம் தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலின் பெயரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றுஎரிந்து கொண்டிருந்த கார் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து அணைத்தனர். இதனால் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை. இருப்பினும் இதுகுறித்து அண்ணாமலை நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)