Advertisment

சென்னை அண்ணாசாலையில் திடீரென பற்றி எரிந்த கார்

A car caught fire in Annasalai Chennai

Advertisment

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் தனது குடும்பத்தினருடன் திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து தனது குடும்பத்தினருடன் காரில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அண்ணா சாலையில் உள்ள நந்தனம் சிக்னல் அருகில் சென்று கொண்டிருந்த போது இவரின் காரில் இருந்து புகை வந்துள்ளது.

அதே சமயம் அவ்வழியாக வந்த கார் ஓட்டுநர் ஒருவர் சுந்தரத்திடம் உங்கள் காரில் இருந்து புகை வந்து கொண்டிருக்கிறது என தெரிவித்து எச்சரிக்கை செய்துள்ளார். இதனையடுத்து சுந்தரம் உடனடியாக தனது காரை சாலையின் ஓரமாக நிறுத்தியுள்ளார். மேலும் காரில் இருந்த 4 பேரும் காரை விட்டு இறங்கியுள்ளனர். இதனையடுத்து காரில் மளமளவென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதனால் அண்ணாசாலையில் சிறிது நேரம் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மேலும் இந்த தீவிபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

police car Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe