Advertisment

சாலையில் பற்றி எரிந்த கார்

 car Burned on the road!

திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர், முசிறியில் உள்ள நண்பரை சந்தித்து விட்டு குளித்தலை வழியாக திருச்சிக்கு காரில் வந்து கொண்டு இருந்தார். அப்போது குளித்தலை பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரின் இன்ஜின் பகுதியிலிருந்து புகையுடன் நெருப்பு பற்றி எரிய ஆரம்பித்தது. உடனடியாக சாலை ஓரமாக காரை நிறுத்திவிட்டு காரை விட்டு அவர் வெளியேறிவிட்டார். சிறிது நேரத்திலேயே அந்தக் கார் மளமளவென பற்றி எரிய ஆரம்பித்தது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருந்தாலும் கார் முழுவதுமாக எரிந்து சேதமானது. தீப்பற்றியதை அறிந்ததும் ஆனந்தன், கீழே இறங்கி விலகி வந்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தப்பித்தார்.

Advertisment

car trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe