Car blast incident... NIA officials raid Ukkadam Vincent Road

Advertisment

கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர்விசாரணை மேற்கொண்டு இச்சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் விசாரிக்கப்பட்டும்வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், என்.ஐ.ஏ எனப்படும் தேசியப் புலனாய்வு முகமை சார்பில் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது.

என்.ஐ.ஏ அதிகாரிகள் இது தொடர்பான விசாரணை மற்றும் சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் கோவை உக்கடம் பகுதி வின்சென்ட் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த முகமது உசேன் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் முகமது உசேன் இல்லாத நிலையில் அவரது குடும்பத்தாரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன. என்.ஐ.ஏ அதிகாரிகளின் உதவிக்காக உள்ளூர் காவல்துறையைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் இந்த விசாரணையில் பங்கெடுத்துள்ளனர்.