Car bike accident one passed away

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள நாகம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (60). இவர் தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வழக்கம்போல் இன்று இருசக்கர மோட்டார் வாகனத்தில் திண்டுக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலைக்கு சென்ற போது, டெக்ஸ்டைல் பார்க் அருகே பின்னால் வேகமாக வந்த கார் இவரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் சுப்பிரமணி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisment

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி தொழிலாளி இறந்ததைக் கண்ட கார் ஓட்டுநர் அங்கிருந்து காருடன் தப்பி சென்றார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அரவக்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment