'car... bar...'- Two people stuck with 900 litres

Advertisment

புதுச்சேரியில் இருந்து மூட்டை மூட்டையாக காரில் சாராயம் கடத்தி வந்த இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காரில் ரகசியமாக சாராயம் கடத்தி வருவதாக மயிலாடுதுறை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் செம்பனார்கோவில்பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது நிற்காமல் சென்ற கார் ஒன்றைத்துரத்திச் சென்ற போலீசார் காரை சோதனையிட்டதில், காரில் சாராயம் மூட்டை மூட்டையாக கடத்திக்கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

உடனே சுதாரிக்கொண்ட கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிய நிலையில் காரில் இருந்த முருகேசன், சுமன் ஆகிய இரண்டு இளைஞர்களைப் போலீசார் கைது செய்தனர். மொத்தமாக அவர்களிடம் இருந்து 900 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. யாருக்காக சாராயம் கடத்தி வரப்பட்டது என்பது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.