செங்கம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அரசகன்னியில் பால் டேங்கர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணித்த தாய், தந்தை, மகன் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகினர். பேச்சாம்பள்ளி சேர்ந்த மூன்று பேரும் விபத்தில் உயிரிழந்த நிலையில், இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் செங்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.