Advertisment

காரும் அரசு பேருந்தும் மோதி விபத்து- 4 பேர் உயிரிழப்பு

Car and government bus collide in accident - 4 people lose their live

திருவண்ணாமலையில் அரசு பேருந்தும் காரும் மோதிக் கொண்ட சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

திருவண்ணாமலை மாவட்டம் சோமாஸ்பாடி அருகே காட்டுக்குளம் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று முன் தினம் பாண்டிச்சேரியில் இருந்து 4 நண்பர்கள் பணி காரணமாக பெங்களூர் சென்று விட்டு நேற்று நள்ளிரவு திருவண்ணாமலை வழியாக பாண்டிச்சேரிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பேருந்தும் காரும் இன்று அதிகாலை 3 மணி அளவில்நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல் பிரேதப்பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்தில்பயணித்த சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

thiruvannamalai police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe