Advertisment

கார் மீது மோதிய பேருந்து! ஓட்டுநர் காதை கடித்த போதை நபர்! 

Car and Government Bus accident madurai

Advertisment

மதுரையைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது46). இவர், அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை ஈரோட்டில் இருந்து மதுரைக்கு பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே புன்னம்சத்திரம் பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது பேருந்திற்கு வழிவிடாமல் கார் ஒன்று சாலையில் தாறுமாறாக ஓடியது. தொடர்ந்து 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு இதே நிலை நீடித்தால், அரசு பேருந்து ஓட்டுநர் தொடர்ந்து (ஹாரன்) சத்தம் எழுப்பி வந்துள்ளார். இந்நிலையில், அந்த கார் திடீரென பிரேக் அடிக்க பேருந்து அந்த காரின் மீது மோதியது. இதில், கார் மற்றும் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன. இதில், பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.

விபத்து நடந்ததும் காரில் வந்தவர்கள் இறங்கி வந்து பேருந்து ஓட்டுநரை தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளனர். இதில் போதையில் இருந்த ஒருவர், பேருந்து ஓட்டுநரின் காதை கடித்துள்ளார். அதில் ஓட்டுநர் காயமடைந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

karur madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe