/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bus4343433.jpg)
கரூர் மாவட்டம், தொண்டைமாங்கனம் சந்தையூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 43). இவர் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் தனது மனைவி பழனியம்மாள் (வயது 42), மகள் சாதனா (வயது 14), மகன் யஸ்வந்த் (வயது 3) மற்றும் உறவினர்கள் விசுவநாதன் (வயது 43), தமிழ்செல்வி (வயது 38), கிருத்திகா (வயது 25) ஆகியோருடன் குருப்பெயர்ச்சியையொட்டி, திருவாரூர் மாவட்டம், ஆலங்குடியில் உள்ள கோயிலுக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, திருவெறும்பூர் அருகே திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையான புதுக்குடி டோல்கேட் அருகே வந்துக் கொண்டிருந்தது. திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த பேருந்து திடீரென கார் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயமடைந்தவர்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் சிறுமி சாதனா சிகிச்சைப் பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவலறிந்த துவாக்குடி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)