Advertisment

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து; மூவர் பலி! 

Car accident in trichy three passed away police arrested two

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம் சாலையில் மது போதையில் இருந்த இருவர் ஓட்டி வந்த சொகுசு கார், தறிகெட்டு ஓடி சாலையோரம் சாலை ஓரத்தில் உறங்கிக் கொண்டிருந்த யாசகர்கள் மீது ஏறி இறங்கியது. இதில் மூவர் பலியாயினர். ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

ஆயினும் விபத்தை ஏற்படுத்திய வாலிபர்கள் காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் காரை விரட்டி பிடித்து போதையில் இருந்த இரு இளைஞர்களையும் தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த உடல்களை மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த நபர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய லட்சுமி நாராயணன் (வயது 23) அஸ்வந்த் (வயது 21) ஆகிய இரு இளைஞர்களையும் போலீஸார் கைது அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

police trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe