
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சரக்கு வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் சிறுமி உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள நரசிங்கபுரத்தை ஒட்டியுள்ள நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் ஒன்றும் காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 வயது சிறுமி, ஓட்டுநர் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தனர். இது தொடர்பாக போலீஸாருக்கும், மீட்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
குடும்பத்துடன் திருமணத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)