திருவண்ணாமலை மாவட்டம்கீழ்பெண்ணாத்தூர்அருகேகார்கள்நேருக்கு நேராக மோதி ஏற்பட்ட விபத்தில் மருத்துவ விற்பனையாளர் ஒருவர் பலியான நிலையில் ஆறு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தகாரில்தனியார் மருந்து விற்பனையாளர் கிஷோர் என்பவர் பயணித்து வந்தார். அப்பொழுதுகார்கீழ்பெண்ணாத்தூர்புறவழிச்சாலை அருகே வந்து கொண்டிருந்த பொழுது பெங்களூரிலிருந்து திருவண்ணாமலைவழியாகசென்னை சென்றகார்மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சென்னையைச் சேர்ந்த மருந்து விற்பனையாளர் கிஷோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேகாரில்பயணித்த வாகன ஓட்டுநர் மற்றும் எதிரே வந்தகாரில்பயணித்த மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாககீழ்பெண்ணாத்தூர்போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.