Car accident near katpadi two passes away

Advertisment

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் மற்றும் அவரது மனைவி சசிகலா. இவர்கள் தனது உறவினர்கள் ஐந்து பேருடன் காட்பாடி பகுதியில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்திற்குச் சென்றுவிட்டு காரில் சோளிங்கர் திரும்பிக்கொண்டு இருந்தனர்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த தேன்பள்ளி பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் காரில் பயணம் செய்த சோளிங்கர் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த குமரேசன் மனைவி சசிகலா (34), அதே பகுதியைச் சேர்ந்த துக்காராமன் மனைவி லலிதா (75) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேல்பாடி காவல்துறையினர், தேன்பள்ளி கிராம மக்கள் உதவியுடன் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் ஓட்டுநரான குமரேசன் உட்பட மூன்று பேர் பலத்தகாயங்களுடன் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குடும்ப உறுப்பினரின் விசேஷத்திற்குச் சென்று திரும்பும் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.