Advertisment

கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் மூழ்கிய கார்: 3 பேர் பலி!

குமாரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே அஞ்சுகண்டறையை சோ்ந்தவர் அனீஷ் (30). இவர் தேன் பெட்டி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சு (27). இந்த தம்பதிகளுக்கு அமா்நாத் என்ற ஓன்றறை வயது குழந்தையும் இருந்தது.

Advertisment

car

இவர்கள் வாரம் தோறும் ஞாயிற்றுகிழமை காலையில் குடும்பத்தோடு குலசேகரம் சென்று, அங்கு கடைகளில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். நேற்று வீட்டிற்கு உறவினர்கள் வந்ததால் குலசேகரத்திற்கு மதியம் சென்றுள்ளனர்.

Advertisment

அங்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு, காரில் வீட்டிற்கு வந்துகொண்டிருந்த போது கோதையாறு இடது கரை சாணல் கரையோரம், கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் மூழ்கியது. இதில் அனீஷ், மஞ்சு, குழந்தை அமா்நாத் மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து ஏற்பட்டது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் அவா்களை காப்பாற்ற யாரும் அங்கு வரவில்லை. பின்னா் ஓரு மணி நேரம் கழித்து அந்த வழியாக வந்த ஓருவா் இதைப் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மஞ்சு மற்றும் குழந்தை அமர்நாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனீஷின் உடலை ஆற்று வெள்ளம் அடித்து சென்றதால், அதை தேடும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

car accident Kanyakumari
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe