car aci

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே கார் விபத்தில் பெண் செய்தியாளர் உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் அங்கையற்கரசி. இவர் சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து சக அலுவலக நண்பர்களான ஷாலினி, சதீஷ், கோகுல், ராம்குமார், பிரபு ராஜ் ஆகியோர் காரில் பள்ளப்பட்டிக்கு சென்றுள்ளனர்.

Advertisment

பின்னர் அங்கையற்கரசியை பார்த்துவிட்டு மாலையில் அவர்கள் சென்னை திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது பொட்டிகுளம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஷாலினி உள்ளிட்ட நான்கு பேரும் படுகாயமடைந்தனர். அவர்களில் ஷாலினி மருத்துவமனை செல்லும் வழியிலே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் செய்தியாளர் ஷாலினி தனது பிறந்த நாளன்று பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.