Advertisment

இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் பலி! 4 பேர் படுகாயம்! 

Car accident in chennai trichy highway 2 persons passes away

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து புதுச்சேரி நோக்கி ஒரு காரில் 5 பேர் பயணம் செய்தனர். அதேபோல் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது.

Advertisment

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள காந்திநகர் அருகே சென்று கொண்டிருந்தபோது திருச்சி நோக்கி சென்ற மற்றொரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே உள்ள தடுப்பு கட்டைகள் மீது ஏறி எதிரே புதுச்சேரி நோக்கி சென்ற காரின் மீது நேருக்கு நேராக, பயங்கரமாக மோதியது.

Advertisment

இந்த மோதலில் காரில் இருந்த புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மகன் முத்துக்குமார்(30), பலாஸ்பேட்டையை சேர்ந்த ராசா மகன் ரகு(32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் அவர்களுடன் பயணம் செய்த தினேஷ், பிரின்ஸ், பிரபு ஆகிய மூன்று பேர் மற்றும் விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் இறந்த இருவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

accident car trichy Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe