cars 1

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகனை தரிசிப்பதற்காக தமிழகம் மட்டுமல்ல கேரளாவிலிருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பழனிக்கு வந்து மொட்டையான்டியை தரிசித்து விட்டு செல்வது வழக்கம்.

Advertisment

அதுபோல் தான் கேரளா கோட்டையம் மாவட்டத்தில் உள்ள கோட்டூரை சேர்ந்த முருகபக்தர்களான சசி, விஜயம்மாள், லேகா, அபிஷி, மனு, தசினி, ஆதித்தன் ஆகிய ஏழு பேர் முருகனை தரிசிப்பதற்காக காரில் பழனியை நோக்கி நேற்று இரவு வந்து கொண்டு இருந்தனர்.

Advertisment

car 2

அப்பொழுது சிந்தலவாடம்பட்டி அருகே கார் வரும் போது எதிர்பாராத விதமாக கார் டிரைவர் சுரேஷ் லேசாக கண் அசரவே கார் நிலைதடுமாறி எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கார் டிரைவர் சுரேஷ், சசி, விஜயம்மாள், லேகா, அபிஷி, மனு ஆகிய ஆறு பேர் காரின் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக பலியானார்கள்.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

மேலும் காரில் வந்த தசினி, ஆதித்தன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு பழனி அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

car 3

இப்படி அதிகாலையில் நடந்த அந்த கோர விபத்தில் 4 ஆண்கள் 2 பெண்கள் என 6 பேர் பரிதாபமாக இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்து குறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

.