/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2121.jpg)
திருச்சியில் இருந்து சிதம்பரம் செல்லும் ரயிலில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை ஆர்.பி.எப் கோட்ட கமாண்டர் ராமகிருஷ்ணன், திருச்சி ரயில்வே ஜங்ஷன் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட ஆர்.பி.எப் வீரர்கள் சோதனை செய்த பின் பிளாட்பாரத்திற்குள் செல்ல அனுமதித்தனர். அவ்வாறு ஸ்கேனர் மிஷின் உதவியுடன் சோதனையிட்ட போது திருச்சி உறையூர் நெசவாளர் காலனியைச் சேர்ந்த பி.ஆர்.கணேசன்(31) என்பவரின் டிராவல் பையில் ஆபரணங்கள் இருப்பது தெரியவந்தது. அந்த பையை கைப்பற்றி சோதனையிட்டபோது அதில் 7 லட்சம் மதிப்பிலான 10 கிலோ வெள்ளி நகைகள் இருந்தது.
இது குறித்து அவரிடம் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்திய போது, திருச்சி மேலபுலிவார்டு ரோடு பகுதி எல்கேஎஸ் டவரில் ஒரு கடை நடத்தி வருவது தெரியவந்தது. திருச்சியில் இருந்து பல வெளிநாடுகளுக்கு அவர் சப்ளை செய்ததும் தெரியவந்தது. அவர் கொண்டு வந்த வெள்ளி ஆபரங்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவரவே, இது குறித்து வணிக வரித்துறை அலுவலகத்திற்கு திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படையினர் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த வணிக வரித்துறையினர் அந்த வெள்ளி நகைகளை மதிப்பிட்டு அதற்கு 41 ஆயிரத்து 812 ரூபாய் வரி விதித்தனர். அந்த வரியினை பி.ஆர்.கணேசன் உடனடியாக கட்டினார். இதனைதொடர்ந்து அந்த வெள்ளி ஆபரணங்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)