Advertisment

“இரக்கம் காட்ட முடியாது” - உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!

Cant show mercy High Court is definite

சென்னை கொளத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி, தரைதளம் மற்றும் முதல் தளத்துக்கு மட்டும் அனுமதி பெற்றிருந்தது. இருப்பினும் உரிய அனுமதியில்லாமல் தரைதளம் மற்றும் மூன்று தளங்களைக் கட்டியுள்ளது. இந்த விதிமீறல் தொடர்பாகப் பள்ளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, பள்ளி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (23.12.2024) விசாரணைக்கு வந்தது.

Advertisment

அப்போது, பள்ளி நிர்வாகம் தரப்பில், “பள்ளியில் 1,500 மாணவர்கள் படித்து வருவதால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் கருணை காட்ட வேண்டும். சென்னை தியாகராய நகரில் ஏராளமான விதிமீறல் கட்டடங்கள் உள்ளன” என வாதிடப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “தியாகராய நகரில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது, அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது.

Advertisment

பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், கோயில்கள் விதிமீறல் செய்தால் அதுவும் விதிமீறல்தான். இவற்றுக்கு இரக்கம் காட்ட முடியாது. அதேசமயம், இந்த கல்வியாண்டு முடிவடையும் வரை அதாவது 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என மாநகராட்சிக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த அளவுக்கு மட்டுமே இரக்கம் காட்ட முடியும்” எனத் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

encroachments Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe