
பெண் பத்திரிகையாளர்கள்குறித்த சர்ச்சை கருத்தைப் பகிர்ந்த வழக்கில், எஸ்.வி.சேகர் மீது குற்றச்சாட்டு பதிவதற்குத் தடை விதித்தும்,வழக்கில் ஆஜராக எஸ்.வி.சேகருக்கு விலக்களித்தும் உத்தரவிட்டுள்ளது(எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும்) சிறப்பு நீதிமன்றம். தன்மீது உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில், ''ஃபேஸ்புக்கில் வந்ததைப் படிக்காமல் பகிர எஸ்.வி.சேகர் என்ன எழுத, படிக்கத் தெரியாதவரா?” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி சதீஷ்குமார், “சமூகத்தைப் புரிந்துகொள்ளாதஇவர்கள் எப்படி முக்கியப் பிரமுகர்கள் எனச் சொல்லிக்கொள்கிறார்கள்'' என கண்டனம் தெரிவித்தார்.
Follow Us