Advertisment

சென்னையில் பெருகிவரும் கஞ்சா போதை மோதல்கள்:பொதுமக்கள் புகார்!!

சென்னை வியாசர்பாடியில் ஷர்மா நகரில் கஞ்சா போதையில் இரு கும்பலைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

எஸ்ஏ காலனி பகுதியில் நேற்று இரவு நடந்த சம்பவம் தொடர்பாக எம்கேபி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த மோதல் ஏற்பட்ட பொழுது அந்த இடத்தின் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் செல்போன்களில் அவர்கள் தாக்கி கொண்டதை வீடியோ எடுத்து அதை ஆதாரமாகக் காவல்நிலையத்தில் கொடுத்து புகார் அளித்தனர்.

Cannibal drug conflicts growing in Chennai:Public Complaint

Cannibal drug conflicts growing in Chennai:Public Complaint

Advertisment

அந்த வீடியோ பதிவில் கஞ்சா போதையில் இருந்த இரண்டு குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. வியாசர்பாடியில் கஞ்சா போதையில்ஏற்படும் மோதல் சம்பவங்கள் பெரும் அச்சமூட்டும் வகையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர். போதைப்பொருள் பயன்பாட்டை காவல்துறையினர் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

அங்குமட்டுமின்றிதற்போது சென்னையில் பல இடங்களில் இரவு நேரங்களில் இது போன்ற மோதல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

public issues police Chennai kanja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe