பர்கூர் மலையில் 'கஞ்சா' - இளைஞர் கைது! 

Cannabis'-youth in Bargur hill

ஈரோடு மாவட்டம் அந்தியூரையடுத்தபர்கூர் மலையில் உள்ள தம்புரட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 46 வயதான சித்தலிங்கம்.இவருக்குச் சொந்தமாக 4 ஏக்கர் விவசாயநிலம் உள்ளது. இவரது விவசாயத் தோட்டத்தில் கஞ்சா செடி உள்ளதாக பர்கூர் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற பர்கூர் போலீசார் தோட்டத்தைச் சோதனையிட்டதில் 7 அடி உயரத்தில்கஞ்சா செடிகள் இருந்ததைக் கண்டுள்ளனர்.

பின்னர், அவரது வீட்டைச் சோதனை செய்ததில், வீட்டில் ஒரு அட்டைப்பெட்டியில் கஞ்சா இலைகளை உலர வைத்திருப்பதைக்கண்டுபிடித்து அவற்றையும்பறிமுதல் செய்தனர். இதனையடுத்து சித்தலிங்கத்தைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Cannabis Erode police
இதையும் படியுங்கள்
Subscribe