/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ramkumar_3.jpg)
தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்ல, குறிப்பாக தூத்துக்குடி நகரில் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா, கஞ்சா மற்றும் உச்சபோதைப் பொருளான 'சரஸ்' போன்றவைகளின் நடமாட்டமிருப்பதையறிந்த மாவட்ட எஸ்.பிஜெயகுமார், நகரின் வடபாகம் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில்தனிப்படை அமைத்தார். இந்த தனிப்படைபோதைப் புகையிலை மற்றும் குட்கா போன்றவற்றில் தொடர்புடையவர்களை வேட்டையாடி வருகிறது.
இதனிடையே நகரின் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில், கஞ்சா நடமாட்டம் பற்றிய தகவல் கிடைக்கவே அப்பகுதியில் சந்தேகப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டது இன்ஸ்பெக்டர் அருளின் டீம். அப்போது,ஆட்டோவிலிருந்த இரண்டு பேரையும் அவர்களிடமிருந்த கஞ்சா பொட்டலங்கள் 2.200 கிலோவையும் கைப்பற்றினார்கள்.சிக்கிய முனியசாமி, மற்றும் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த முரளிதாஸ் காந்தி இருவரையும் கைது செய்ததுடன், கடத்தலுக்கு உதவிய அ.தி.மு.ககொடி மற்றும் தலைவர்களுடன் கூடிய படம் வரைந்த 'இதயக்கனி கேப்ஸ்' எனும் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ramkumar-in.jpg)
இந்த ஆட்டோ, முரளிதாஸ் காந்தியின் ஆட்டோவாகும். இவர் தனது இட்லி கடையின் மூலமாகவும் கஞ்சா பொட்டலங்களை விற்று வந்திருப்பது தெரிய வந்ததுஎன்கின்றனர் தனிப்படையினர். மேலும், முரளிதாஸ் காந்தி அண்மையில்தான் அ.தி.மு.க.வின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் மூலம் 39 ஆவது வட்டக் கழகச் செயலாளர் பொறுப்பைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்,இவரது நடவடிக்கையை நகரின் முக்கிய அ.தி.மு.கபுள்ளிகள் கட்சியின் தலைமைக்கு ஏற்கனவே புகாரும் அனுப்பியுள்ளனராம்.
Follow Us