Skip to main content

சென்னையில் கஞ்சா விற்பனை… கல்லூரி மாணவர்கள் கைது... சென்னையில் பரபரப்பு!

Published on 25/08/2020 | Edited on 25/08/2020

 

cannabis suppliers college students arrested in chennai
மாதிரி படம்

 

 

சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள தனியார் ஹோட்டல் விடுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

 

இதையடுத்து  அங்கு  விரைந்த போலீஸ் அவர்களிடம் இருந்து  18 கிலோ கஞ்சா, ஒரு எடை மிஷின், ரூ.6000 பணம், 4 செல்போன்களை பறிமுதல் செய்து, அங்கிருந்த மதுரவாயலை சேர்ந்த எழிலரசன், வளசரவாக்கத்தை சேர்ந்த பிரித்திவிராஜ் , மாம்பலத்தை சேர்ந்த ராகுல், பாண்டிச்சேரியைச் சேர்ந்த உபயதுல்லா, டேவிட் பிராங்கிளின், உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.

 

விசாரணையில் இவர்கள் வடபழனியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவதாகவும், கஞ்சா பழக்கத்தின் மூலம் தி.நகரை சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவர் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என தங்களை கஞ்சா விற்க தூண்டியதாகவும் மேலும் இதற்கு முன் கஞ்சா விற்றதில்லை, பணத்திற்காக ஆசைப்பட்டு  முதன் முறையாக இது போல செய்ததாகவும் கூறியுள்ளனர்.

 

மேலும் விக்னேஷ் தங்களை போன் மூலம் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட நபர் கஞ்சா பொட்டலத்தை கொடுப்பார் அதை பத்திரமான ஓர் இடத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும். பிறகு மீண்டும் நான் போன் செய்து சொல்லும் நபரிடம் இதை ஒப்படைக்க வேண்டும் என கூறி உள்ளார் . இதனால் கஞ்சாவை வீட்டிற்கு எடுத்து சென்றால் மாட்டிக் கொள்வோம் என அஞ்சிய மாணவர்கள் தனியார் விடுதியில் அறை எடுத்து அதை பதுக்கி வைத்து சுழற்சி முறையில் கஞ்சாவை பாதுகாத்து வந்துள்ளனர் . இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் இவர்கள் பிடிபட்டது தெரியவந்தது.

 

மேலும் கல்லூரி மாணவர்கள் குறித்து அவர்கள் படிக்கும் கல்லூரியில் போலீசார் விசாரித்தபோது அனைவரும் நன்கு படிக்கும் மாணவர்கள் எனவும் அவர்கள் மேல் இதற்கு முன் எந்த வழக்குகளோ, புகாரோ இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். எனவே கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை மூளைச்சலவை செய்து கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்ய தூண்டிய விக்னேஷை போலீசார் தேடி வருகின்றனர். கஞ்சா பழக்கத்தில் அடிமையான கல்லூரி மாணவர்களின் ஒருவரின் தந்தை காவல்துறையில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.